செவ்வாய், 22 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 22nd Novmber 2022

சத்திய ஆராதனை
22nd Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139:1-6 

துதி ஆராதனை
*******************
என் உட்காருதலையும் அறிந்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:2 
முற்புறத்திலும் என்னை நெருக்கி உமது கரத்தை என்மேல் வைக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:5 
பிற்புறத்திலும் என்னை நெருக்கி உமது கரத்தை என் மேல் வைக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:5

என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 139:2 
என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே அதை அறிந்திருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 139:4

என் எழுந்திருக்குதலையும் அறிந்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 139:2 
நான் நடந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 139:3 
நான் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 139:3

நன்றி ஆராதனை
**********************
என்னை ஆராய்ந்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 139:1 
என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங்கீதம் 139:1 
என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியுமாதலால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 139:4

தொழுகை ஆராதனை
*************************
உம்முடைய அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறபடியால் தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன். 
சங் 139:6 
உம்முடைய அறிவு எனக்கு எட்டாத உயரமாயிருக்கிறபடியால் தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன் 
சங் 139:6
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக