திங்கள், 28 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 28th Novmber 2022

சத்திய ஆராதனை
28th Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 140:6-13

துதி ஆராதனை 
*******************
என் தேவனாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 140:6 
ஆண்டவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 140:7
கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 140 :11

என் இரட்சிப்பின் பெலனாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங்கீதம் 140:7 
யுத்தநாளில் என் தலையை மூடின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 140:7
என்னை வளைந்து கொள்கிறவர்கள்மேல் நெருப்புத்தழலை விழச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 140:10 
என்னை வளைந்து கொள்கிறவர்களை அக்கினியிலும் அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 140:10

என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு செவிக் கொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 140:6 
துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடிச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 140:8
என்னை வளைந்து கொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகளை அவர்கள் தலைகளையே மூடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 140:9

நன்றி ஆராதனை 
**********************
துன்மார்க்கன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 140:8
சிறுமையானவனின் வழக்கை விசாரிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சாங் 140:12 
எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 140:12

தொழுகை ஆராதனை
*************************
பொல்லாத நாவுள்ளவனை பூமியிலே நிலத்திருக்காமலிருக்க செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 140:11
நீதிமான்களை உமது நாமத்தை துதிக்கச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 140:13 
செம்மையானவர்களை உமது சமூகத்தில் வாசம் பண்ணச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 140:13
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக