புதன், 30 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 30th Novmber 2022

சத்திய ஆராதனை
30th Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதா 141:6-10 

துதி ஆராதனை
******************* 
ஆண்டவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 141:8
உம்மை நம்பியிருக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 141:8

என் கண்கள் உம்மை நோக்கியிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 141:8 
என் ஆத்துமாவை வெறுமையாக விடாத தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 141:8

துன்மார்க்கர் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கு என்னை விலக்கி இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 141:9 
அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கு என்னை விலக்கி இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 141:9

நன்றி ஆராதனை
**********************
(என் ஜெபம்) என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 141:6
(என் வாய்க்குக் காவல் இல்லாவிட்டால்)
எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 141:7

தொழுகை ஆராதனை
************************
துன்மார்க்கரை தங்கள் வலைகளில் அகப்படச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 141:10 
என்னை துன்மார்கருடைய வலைகளிலிருந்து தப்பி கடந்துப் போகச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங்கீதம் 141:10
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக