21st Novmber 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 138:5-8
துதி ஆராதனை
********************
உயர்ந்தவராயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 138:6
மகிமையுள்ள கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 138:5
என்றுமுள்ள உமது கிருபைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 138:8
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 138:6 மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 138:6
என்னை இரட்சிக்கிற உமது வலதுகரத்திற்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 138:7
உமது வழிகளை பாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 138:5
நெகிழவிடாதிருக்கிற உமது கரத்தின் கிரியைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 138:8
என்னை உயிர்ப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 138:7
நன்றி ஆராதனை
**********************
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என்னை உயிர்ப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 138:7
என் சத்தருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 138:7
எனக்காக யாவையும் செய்து முடிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 138:8
தொழுகை ஆராதனை
*************************
பெரிதான உமது மகிமைக்காக கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 138:5
உமது வலதுகரத்திற்காக கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 138:7
உமது கரத்தின் கிரியைகளுக்காக கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 138:8
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக