10th November 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 133
துதி ஆராதனை
*******************
ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்படுகிற நல்ல தைலத்துக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 133:2
ஆரோனுடைய தாடியிலே வடிகிறதுமான நல்ல தைலத்துக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 133:2
ஆரோனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 133:2
நல்ல தைலமாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 133:2
பனிக்கு ஒப்பாய் இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 133:3
எர்மோன்மேல் இறங்கும் பனிக்கு ஒப்பாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 133:3
சீயோன் பர்வதங்கள்மேல் இறங்கும் பனிக்கு ஒப்பாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 133:3
நன்றி ஆராதனை
*********************
இதோ சகோதரரை ஒருமித்து வாசம்பண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 133:1
இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறதை நன்மையாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 133:1
இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறதை இன்பமாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 133:1
தொழுகை ஆராதனை
*************************
கட்டளையிடுகிற கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 133:3
என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தை கட்டளையிடுகிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 133:3
என்றென்றைக்கும் ஜீவனை கட்டளையிடுகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 133:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக