14th Novmber 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 135:7-12
துதி பலி ஆராதனை
*************************
எகிப்திலே மனுஷனுடைய தலைப்பிள்ளைகளை அடித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 135:8
எகிப்திலே மிருகத்தின் தலையீற்றுகளை அடித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 135:8
அநேக ஜாதிகளை அடித்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 135:10
எகிப்து தேசத்திலே அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 135:9
எகிப்து தேசத்தின் நடுவில் பார்வோன் மேல் அடையாளங்களை அனுப்பின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 135:9
எகிப்து தேசத்தின் நடுவில் பார்வோனுடைய எல்லா ஊழியக்காரர் மேலும் அற்புதங்களை அனுப்பின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 135:9
எமோரியாவின் ராஜாவாகிய சீகோனை அழித்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 135:11
பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 135:11
கானானின் சகல ராஜ்ஜியங்களையும் அழித்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 135:11
நன்றி பலி ஆராதனை
*************************
இஸ்ரவேலுக்காக பலத்த ராஜாக்களை கொன்ற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 135:10
இஸ்ரேலுக்கு தேசத்தை கொடுத்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 135:12
கானானியரின் தேசத்தை தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு சுதந்தரமாக கொடுத்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 135:12
தொழுகை பலி ஆராதனை
*************************
பூமியின் கடையாந்தரங்களில் இருந்து மேகங்களை எழுப்பப்பண்ணுகிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 135:7
மழையுடன் மின்னலையும் உண்டாக்குகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 135:7
காற்றை தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப் பண்ணுகிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 135:7
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக