வெள்ளி, 18 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 18th Novmber 2022

சத்திய ஆராதனை
18th Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 137

துதி ஆராதனை
********************
எங்களை சீயோனை நினைக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 137:1 
எங்களை எருசலேபை நினைக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 137:6

எங்கள் கின்னரங்களால் நாங்கள் பாடுகிற பாடல்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 137:3 
எங்கள் கின்னரங்களால் மங்கள கீதத்தை பாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 137:3

சீயோனின் பாட்டுகளை பாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 137:3
கர்த்தரின் பாட்டை நாங்கள் பாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 137:4

நன்றி ஆராதனை
*********************
என் வலதுகை தன் தொழிலை மறவாமல் இருப்பது போல் எருசலேமை மறவாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 137:5
எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 137:6

தொழுகை ஆராதனை
************************
எருசலேமின் நாளில்
ஏதோம் புத்திரரை அஸ்திபாரமட்டும் இடித்துப் போடுகிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 137:7 
எருசலேமின் நாளில் பாபிலோன் குமாரத்திக்கு பதில் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 137:8
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக