புதன், 2 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 2nd November 2022

சத்திய ஆராதனை
2nd November 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 128 

துதி ஆராதனை 
*******************
கர்த்தருக்கு பயப்படுற மனுஷனை பாக்கியவானாக மாற்றுகிற தேவனே உம்மை உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 128:1 
உமது வழிகளில் நடக்கிற மனிதனை பாக்கியவானாக மாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 128:1 
உன் கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவாய் என்ற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 128:2

கர்த்தருக்கு பயப்படுகிறனுக்கு பாக்கியத்தை உண்டாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 128:2 
கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு நன்மையை உண்டாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 128:2 
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தை காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 128:6

கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனை ஆசீர்வதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 128:4 
கர்த்தருக்கு பயப்படுகிறவனுடைய மனைவியை தன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக்கொடியைப் போலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 128:4
கர்த்தருக்கு பயப்படுகிறவனுடைய பிள்ளைகளை தன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்கன்றுகளைப் போல் இருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 128:4

நன்றி ஆராதனை 
*********************
என் மனைவியை கனி தரும் திராட்சைக்கொடியைப் போல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 128:3 
என் பிள்ளைகளை ஒலிவமரக்கன்றுகளைப் போல் இருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 128:3 
என் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 128:6

தொழுகை ஆராதனை
************************
சீயோனிலிருக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 128:5
சீயோனிலிருந்து என்னை ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன். 
சங் 128:5 
ஜீவனுள்ள நாளெல்லாம் என்னை எருசலேமின் வாழ்வை காணச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 128:5
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக