சத்திய ஆராதனை
17th Novmber 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 136:13-26
துதி பலி ஆராதனை
*************************
என்றுமுள்ள உம்முடைய கிருபைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 136:13
பார்வோனை சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்து போட்டவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 136:15
பார்வோனுடைய சேனைகளை சிவந்த சமத்திரத்தில் கவிழ்த்து போட்டவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 136:15
இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் நடத்தினவராகிய கர்த்தராகி தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 136:16
பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 136:17
பிரபலமான ராஜாக்களை அழித்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 136:18
எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 136:19
பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் சாங் 136:20
அவர்கள் தேசத்தைச் சுதந்திரமாக தந்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 136:21
அவர்கள் தேசத்தை தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 136:22
நன்றி பலி ஆராதனை
*************************
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 136:23
நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைப் பண்ணினவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 136:24
மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 136:25
தொழுகை பலி ஆராதனை
*************************
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவராகிய கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 136:13
சிவந்த சமுத்திரத்தின் நடுவே இஸ்ரவேலரைக் கடந்துபோகப் பண்ணினவராகிய கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 136:14
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 136:26
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக