5th November 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 131
துதி ஆராதனை
+++++++++++++++
இஸ்ரவேலை கர்த்தரை நம்பியிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங்130:1
ஆத்துமாவை பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 131:2
தாயின் பால்மறந்த குழந்தையைப்போல் என் ஆத்துமாவை அடக்க பண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 131:2
தாயின் பால்மறந்த குழந்தையைப்போல் என் ஆத்துமாவை அமரப் பண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 131:2
என்னை பெரிய காரியங்களில் தலையிடாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 131:1
எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 131:1
நன்றி ஆராதனை
++++++++++++++++
என் கண்களில் இறுமாப்பு இல்லாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 131:1
என் கண்களில் மேட்டிமை இல்லாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 131:1
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
இஸ்ரவேலை இது முதல் உம்மை நம்பியிருக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 131:3
இஸ்ரவேலை என்றென்றைக்கும் உம்மை நம்பியிருக்கச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 131:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக