சனி, 26 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 26th Novmber 2022

சத்திய ஆராதனை
26th Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 140:1-5 

துதி ஆராதனை 
*******************
பொல்லாத மனுஷனுக்கு என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 140:1 
துன்மார்க்கனுக்கு என்னை நீங்கலாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 140:4
துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 140:4

தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்திக்கிற பொல்லாத மனுஷனுக்கு என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 140:2 
கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 140:1 
கொடுமையுள்ளவனிடமிருந்து என்னை இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 140:1

என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறவர்களினின்று என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 140:4 
எனக்குச் சுருக்குகளை வைக்கிற அகங்காரிகளிடமிருந்து என்னை தப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 140:5 
கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 140:4

நன்றி ஆராதனை 
**********************
அகங்காரிகள் எனக்கு வைக்கிற கண்ணிலிருந்து என்னைத் தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 140:5 
அகங்காரிகள் எனக்கு மறைவாய் வைக்கிற கயிறுகளினின்று என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 140:5 
வழியோரத்திலே எனக்கு விரிக்கிற வலையினின்று என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 140:5

தொழுகை ஆராதனை
************************
யுத்தம் செய்ய நாள்தோறும் கூட்டம் கூடுகிறவர்களினின்று என்னை இரட்சிக்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 140:2 
சர்ப்பத்தைப் போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறவர்களினின்று என்னை தப்புவிக்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 140:3 
உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறவர்களினின்று என்னை விலக்குகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 140:3
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக