24th Novmber 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 139:14-18
துதி ஆராதனை
********************
என்னை பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 139:14
என்னை ஒளிப்பிடத்தில் உண்டாக்கின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 139:15
பூமியின் தாழ்விடங்களில் விசித்திர விநோதமாய் என்னை உருவாக்கின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 139:15
என் கருவை உம்முடைய கண்களால் கண்ட தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 139:16
என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லையாதலால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 139:15
என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தையும் உருவேற்ப்படுத்தின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 139:16
உமது ஆலோசனைகளை நான் எண்ணப்போனால் மணலைப்பார்க்கிலும் அதிகமாக இருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 139:18
என் அவயங்களை உருவேற்படுத்தின நாட்களை எழுதின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 139:16
என் அவயங்கள் உருவேற்படுத்தினதை உமது புத்தகத்தில் எழுதின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 139:16
நன்றி ஆராதனை
**********************
நான் துதிக்கும் தேவனே என்னை அதிசயமாய் உண்டாக்கினபடியால் உமக்கு கோடான கோடி நன்றி
சங் 139:14
உமது கிரியைகள் என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியுமாதலால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 139:14
நான் விழிக்கும் போது என்னை இன்னும் உம்மண்டையில் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 139:18
தொழுகை ஆராதனை
*************************
உமது கிரியைகள் அதிசயமானவைகளாதலால் தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 139:14
தேவனே உமது ஆலோசனைகள் அருமையானவைகளாதலால் தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 139:17
தேவனே உமது ஆலோசனைகளின் தொகை அதிகமாதலால் தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 139:17
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக