செவ்வாய், 8 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 8th November 2022

சத்திய ஆராதனை
8th November 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 132:7-12 

துதி ஆராதனை
*******************
உமது வல்லமை விளங்கும் பெட்டிக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 132:8 
உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 132:8  
தாவீதை புறக்கணியாத தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 132:10

உம்முடைய ஆசாரியர்களை நீதியைத் தரித்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 132:9 
உம்முடைய பரிசுத்தவான்களை கெம்பிரீருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 132:9 
நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் முகத்தை புறக்கனியாத தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 231:10

எம் குமாரரை உமது உடன்படிக்கையை காத்து நடக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 132:12
எம் குமாரரை நீர் போதிக்கும் உமது சாட்சிகளை காத்து நடக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 132:12 
உன் குமாரருடைய குமாரர்கள் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்று தாவீதுக்கு ஆணையிட்ட தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 132:12

நன்றி ஆராதனை
**********************
உம்முடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசிக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 132:7 
உமது பாதபடியில் பணிந்து கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 132:7 
உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்று தாவீதுக்கு ஆணையிட்ட தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 132:11 

தொழுகை ஆராதனை
************************
தாவீதிற்கு ஆணையிட்ட தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 132:12
தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்ட தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 132:12 
ஆணையிட்டதில் தவறாத தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 132:12
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக