9th November 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 132:13-18
துதி ஆராதனை
*******************
சீயோனை தெரிந்து கொண்ட கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 132:13
சீயோனைத் தமக்கு வாசஸ்தலமாக தெரிந்து கொண்ட தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 122:13
சீயோனைத் தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங்132:13
சீயோனின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 132:16
சீயோனில் உள்ள பரிசுத்தவான்களை மிகவும் கெம்பியிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 132:16
சீயோனை என்றென்றைக்கும் நீர் தங்கும் இடமாக விரும்பின தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 132:14
தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப் பண்ணின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 132:17
நீர் அபிஷேகம் பண்ணிவித்தவனுக்காக
ஒரு விளக்கை ஆயத்தம் பண்ணின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 132:17
தாவீதின் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 132:18
நன்றி ஆராதனை
*********************
சீயோனை விரும்பி அதில் வாசம் பண்ணுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 132:14
சீயோனின் ஆகாரத்தை ஆசீர்வதித்து வருகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 132:15
சீயோனின் ஏழைகளை அப்பத்தினால் திருப்தியாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 132:15
தொழுகை ஆராதனை
*************************
ஒரு கொம்பை முளைக்கப் பண்ணின தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 132:17
ஒரு விளக்கை ஆயத்தம் பண்ணின தேவனே உம்மைப் பணிந்து கொள்ளுகிறேன்
சங் 132:17
தாவீதின்மீது ஒரு கிரீடம் பூக்கும்படி செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 132:18
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக