16th Novmber 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 136:1-12
துதி பலி ஆராதனை
*************************
தேவாதி தேவனாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 136:2
கர்த்தாதி கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 136:3
எகிப்தியருடைய தலச்சன்களைச் சங்கரித்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 136:10
எகிப்தியர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலை புறப்படப் பண்ணினவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 136:11
பலத்த கையினால் இஸ்ரவேலரை புறப்படப் பண்ணினவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 136:12
ஓங்கிய புயத்தினால் இஸ்ரவேலரை புறப்படப் பண்ணினவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 136:12
பெரிய சுடர்களை உண்டாக்கினவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 136:7
பகலில் ஆளச் சூரியனை படைத்தவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 136:8
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 136:9
நன்றி பலி ஆராதனை
*************************
நாங்கள் துதிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 136:1
நல்லவராயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 136:1
என்றுமுள்ள உமது கிருபைக்காக கர்த்தாதி கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 136:1
தொழுகை பலி ஆராதனை
*************************
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவராகிய கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங்கீதம் 136:4
வானங்களை ஞானமாய் உண்டாக்கினவராகிய கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 136:5
தண்ணீர்களுக்கு மேலே பூமியைப்பரப்பினவராகிய கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 136:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக