சனி, 19 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 19th Novmber 2022

சத்திய ஆராதனை
19th Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 138:1-4

துதி ஆராதனை
********************
நான் துதிக்கிற உமது கிருபைக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 138:2
நான் துதிக்கிற உமது உண்மைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 138:2
உமது வார்த்தையை மகிமைப்படுத்தின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 138:2

என் ஆத்துமாவில் பெலன் தந்த கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 138:3 
என் ஆத்துமாவைத் தைரியப்படுத்தின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 138:3 
உமது வாயின் வார்த்தைகளை கேட்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 138:4

நான் கூப்பிட்ட நாளில் எனக்கு மறுஉத்தரவு அருளின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 138:3 
உமது நாமத்தை துதிக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 138:2
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்டு உம்மை துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 138:4

நன்றி ஆராதனை 
**********************
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக உம்மை துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 138:2 
உமது பரிசுத்த ஆலயத்துக்கு நேராக பணிந்து துதிக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 138:2 
உம்மை என் முழு இருதயத்தோடு துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 138:1

தொழுகை ஆராதனை
*************************
சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் நீர் மகிமைப்படுத்தின உமது வார்த்தைக்காக கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 138:2
பூமியின் ராஜாக்கள் எல்லோரும் துதிக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 138:4 
தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 138:1
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக