புதன், 23 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 23rd Novmber 2022

சத்திய ஆராதனை
23rd Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 139:7-13

துதி ஆராதனை 
*******************
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:8 
நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:8
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய் தங்கினாலும் நீர் அங்கே இருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 139:9

இருளில் மூடிக்கொள்ளுமென்றாலும் இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்படியால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 139:11 
நீர் என் உள்ளேந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 139:13 
நான் வானத்திற்கு ஏறினாலும்
உமது வலது கரம் என்னைப் பிடிக்குமாதலால் தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 139:10

என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 139 ல:13
நான் சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும் அங்கேயும் உமது கை என்னை நடத்துமாதலால் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 139:10

நன்றி ஆராதனை
**********************
உன்னுடைய ஆவிக்கு மறைவாக எங்கேயும் போக முடியாது என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 139:7 
உமது சமூகத்தை விட்டு எங்கேயும் ஓடமுடியாது என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 139:7

தொழுகை ஆராதனை
*************************
உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது என்பதை உணர்த்துகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 139:12 
உமக்கு இரவும் பகலைப் போல் வெளிச்சமாயிருக்கும் ஆதலால் தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 139:12 
உமக்கு இருளும் வெளிச்சமும் சரி ஆதலால் தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 139:12
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக