3rd November 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 129
துதி ஆராதனை
********************
என் சிறுவயது தொடங்கி என்னை நெருக்கினாலும் எவரும் என்னை மேற்கொள்ளாமற்போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 129:1
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும் என்னை மேற்கொள்ளாமற்போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 129:2
உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது தங்கள் படைச்சால்களை நீளமாக்கினாலும் அவர்களை மேற்கொள்ளாமற்ப்போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 129:3
சீயோனை பகைக்கிற அனைவரும் வெட்கப்படச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 129:5
சீயோனை பகைக்கிற அனைவரையும் பின்னிட்டு திரும்பச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 129:5
துன்மார்க்கருடைய கயிறுகளை அறுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 129:4
சீயோனை பகைக்கிற அனைவரும் வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு ஒப்பாகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 129:6
வீட்டின்மேல் முளைக்கும் புல் வளருமுன் சீயோனை பகைக்கிறவனை உலர்ந்துப் போக செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 129:6
வீட்டின் மேல் முளைக்கும் புல்லை அறுக்கிறவன் கையை நிரம்பாமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 129:7
நன்றி ஆராதனை
**********************
கர்த்தருடைய நாமத்தினால் எங்களை ஆசீர்வதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 129:8
கர்த்தருடைய நாமத்தினால் ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்லாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 129:8
அரிகளைக் கட்டுகிற
துன்மார்க்கனுடைய மடியை நிரப்பாமல் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 129:7
தொழுகை ஆராதனை
************************
நீதியுள்ளவராகிய கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 129:4
நீர் துன்மார்க்குடைய கயிறுகளை அறுத்தீரென்று இஸ்ரவேலை சொலலச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 129:4
எங்களுக்கு உண்டாகிற கர்த்தருடைய ஆசீர்வாதத்துக்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 129:8
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக