செவ்வாய், 1 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 31st October 2022

சத்திய ஆராதனை
31st October 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 126 

துதி ஆராதனை
*******************
சியோனின் சிறையிருப்பைத் திருப்புகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 126:1 
எங்கள் சிறையிருப்பை திருப்புகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 126:4 

தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல எங்கள் சிறையிருப்பை திருப்புகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 126:4 
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்ததினால் எங்களை மகிழ்ந்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 126:3

சிறையிருப்பை திருப்பும்போது எங்களுடைய வாய் நகைப்பினால் நிறைந்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 126:2  
சீயோனின் சிறையிருப்பை திருப்பும் போது எங்களுடைய நாவு ஆனந்தசத்தத்தினால் நிறைந்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 126:2

நன்றி ஆராதனை 
**********************
கண்ணீரோடு விதைக்கிறவர்களை கெம்பீரத்தோடு அறுக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 126:5 
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடு வரச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 126:6

தொழுகை ஆராதனை
*************************
சீயோனின் சிறையிருப்பை திருப்பும் போது சொப்பனம் காண்கிறதுபோல் இருக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 126:1 
கர்த்தர் இவர்களுக்கு பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொள்ளச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 126:2
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக