வெள்ளி, 4 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 4th November 2022

சத்திய ஆராதனை
4th November 2022

துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்

குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 130 

துதி ஆராதனை
*******************
நான் காத்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
 சங் 130:5
ஆழங்களிலிருந்து நான் நோக்கி கூப்பிடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 130:1 
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா காத்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 130:6

திரளான மீட்பை வைத்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 130:7 
கிருபையுள்ளவராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 130:7 
என் ஆத்துமா காத்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 130:5

என் சத்தத்தை கேட்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 130:2 
என் விண்ணப்பங்களின் சத்தத்தை கவனிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 130:2 
என் விண்ணப்பங்களின் சத்தத்தை கவனிக்கிற உமது செவிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 130:2

நன்றி ஆராதனை 
*********************
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு ஆதலால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 130:4 
நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால் எவரும் நிலைநிற்க முடியாது என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 130:3 
நான் நம்பியிருக்கிற உம்முடைய வார்த்தைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 130:5

தொழுகை ஆராதனை
*************************
இஸ்ரவேலை மீட்டுக் கொள்கிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 130:8 
இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களிலும் மீட்டு கொள்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 130:8 
இஸ்ரவேலை கர்த்தரை நம்பி இருக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 130:7
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக