செவ்வாய், 29 நவம்பர், 2022

சத்திய ஆராதனை 29th Novmber 2022

சத்திய ஆராதனை
29th Novmber 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 141:1-5

துதி ஆராதனை
*******************
நான் நோக்கிக் கூப்பிடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 141:1 
என்னிடத்திற்கு வரத் தீவிரிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 141:1
நீதிமான் என்னை தயவாய்க் குட்டி என்னை கடிந்து கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 141:5

என் இருதயத்தை துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 141:4
என் விண்ணப்பத்தை உமக்கு முன்பாக தூபமாக இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 141:2 
என் கையெடுப்பை உமக்கு முன்பாக அந்திப்பலியாக இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 141:2

என் சத்தத்திற்கு செவிகொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 141:1 
என் விண்ணப்பத்திற்கு செவிக்கொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 141:2
நீதிமானுடைய இக்கட்டுகளில் என்னை ஜெபம் பண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 141:5

நன்றி ஆராதனை
**********************
அக்கிரமஞ் செய்கிற மனுஷரோடு என்னை இணங்கவொட்டாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 141:4 
ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கிறவர்களோடு என்னை இணங்க வொட்டாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 141:4 
துன்மார்க்கருடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 141:4 

தொழுகை ஆராதனை
*************************
நீதிமான் என்னைக் கடிந்து கொள்வது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 141:5 
என் வாய்க்குக் காவல் வைக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 141:3 
என் உதடுகளின் வாசலைக் காத்துக் கொள்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 141:3
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக