7th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:65-72
தேத்
******
துதி ஆராதனை
*******************
நல்லவராயிருக்க கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:68
நன்மை செய்கிறவருமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:68
எனக்கு போதிக்கிற உமது பிரமாணங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:68
உமது வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:70
முழு இருதயத்தோடு உம்முடைய கட்டளைகளை கைக்கொள்ள செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:69
உம்முடைய வார்த்தையை காத்துக் நடக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:67
உத்தம நிதானிப்பை எனக்கு போதித்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:66
அறிவு எனக்கு போதித்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:66
நான் விசுவாசமாயிருக்கிற உம்முடைய கற்பனைகளுக்காக தேவனே உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்
சங் 119:66
நன்றி ஆராதனை
**********************
உமது பிரமாணங்களை கற்க நான் உபத்திரவபட்டதால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:71
உமது வசனத்தின்படி அடியேனை நடத்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சாங் 119:65
உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:65
தொழுகை ஆராதனை
*************************
அநேகமாயிரம் பொன்னைப் பார்க்கிலும் நீர் விளம்பின வேதமே எனக்கு நலமாதலால் தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:72
அநேகமாயிரம் வெள்ளியைப் பார்க்கிலும் நீர் விளம்பின வேதமே எனக்கு நலமாதலால் தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:72
அகங்காரிகள் cஎனக்கு விரோதமாக பொய்களைப் பிணைந்தாலும் உமது கட்டளைகளை கைக்கொள்ளச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:69
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக