13th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 119:105-112
நூன்
+++++
துதி ஆராதனை
++++++++++++++
உம்முடைய நீதி நியாயங்களை காத்து நடக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:106
காத்து நடப்பேன் என்று நான் ஆணையிட்ட உம்முடைய நீதி நியாயங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 119:106
நான் நிறைவேற்றப் போகிற உம்முடைய நீதி நியாயங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:106
உமது நியாயங்களை எனக்கு போதித்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 119:108
உம்முடைய வசனத்தின்படி என்னை உயிர்ப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:107
உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:112
உம்முடைய வேதத்தை மறவாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 119:109
என் வாயின் உற்சாகபலிகளை அங்கீகரிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:108
என் இருதயத்தின் மகிழ்ச்சியாக இருக்கிற உம்முடைய சாட்சிகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:111
உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறாமல் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 119:110
நன்றி ஆராதனை
++++++++++++++++
உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமாயிருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:105
உம்முடைய வசனம் என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறபடியால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 119:105
மிகவும் உபத்திரவப்படுகிற என்னை உம்முடைய வசனத்தின்படி உயிர்ப்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சாங் 119:107
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
நான் நித்திய சுதந்தரமாக்கிக் கொண்டிருக்கிற உம்முடைய சாட்சிகளுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 119:111
முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்து தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 119:112
எப்பொழுதும் என் பிராணன் என் கையில் இருந்தாலும் உம்முடைய வேதத்தை மறவாமலிருக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 119:109
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக