வியாழன், 8 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 8th December 2022

சத்திய ஆராதனை
8th December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 144:10-15

துதி ஆராதனை 
*******************
உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 144:10  
எங்கள் குமாரரை இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப் போலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 144:12 
எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப் போலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 144:12

அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 144:11
மாயையைப் பேசும் வாயுடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கி தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி கோசன்னா 
சங் 144:11 
கள்ளத்தனமான வலதுகை உடைய அந்நிய புத்திரரின் கைக்கி என்னை விலக்கித் தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 144:11

எங்களிடத்தில் சத்துரு உட்புகுதலிராமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 144:14 
எங்களிடத்தில் சத்துரு குடியோடிப் போகுதலிராமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 144:14 
எங்கள் வீதிகளில் கூக்குரல் உண்டாகாமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 144:14

நன்றி ஆராதனை 
*********************
எங்கள் களஞ்சியங்கள் சகலவிதமான வஸ்துகளை
கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 144:13 
எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 144:13  
எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 144:14

தொழுகை ஆராதனை
*************************
இவ்விதமான சீரைப் பெற்ற பாக்கியமுள்ள ஜனமாக எங்களை மாற்றுகிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 144:15 
உம்மை தெய்வமாகக் கொண்டிருக்கிற எங்களை பாக்கியமுள்ள ஜனமாக மாற்றுகிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 144:15
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக