2nd December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 142:5-8
துதிஆராதனை
*******************
எனக்கு தயவு செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 142:7
என்னை நீதிமான்கள் சூழ்ந்து கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 142:7
என் ஆத்துமாவை காவலுக்கு நீங்கலாக்கிவிட்ட கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 142:7
என்னைப் பின் தொடர்கிறவர்களுக்கு என்னை தப்புவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 142:6
நான் நோக்கி கூப்பிடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 142:5
என் கூக்குரலுக்குச் செவி கொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 142:6
நன்றி ஆராதனை
**********************
உமது நாமத்தை நான் துதிக்கும்படிச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 142:7
என்னிலும் பலவான்களாயிருக்கிறவர்களுக்கு என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 142:6
தொழுகை ஆராதனை
***********************
எனக்கு அடைக்கலாமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 142:5
ஜீவனுள்ளோர் தேசத்தில் என் பங்குமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 142:5
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக