7th December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 144:5-10
துதி ஆராதனை
*******************
வானங்களை தாழ்த்தி இறங்குகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 144:5
பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 144:5
ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 144:10
உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி என்னை இரட்சிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 1 44:7
ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 144:7
அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கி தப்புவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 144:8
மாயையைப் பேசும் அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கி தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 144:8
கள்ளத்தனமான வலதுகை உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 144:8
நன்றி ஆராதனை
*********************
உமக்கு புதுப்பாட்டை பாடச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 144:9
தம்புரினால் உம்மை கீர்த்தனம் பண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 144:9
பத்து நரம்பு வீணையினாலும் உம்மை கீர்த்தனம் பண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 144:9
தொழுகை ஆராதனை
*************************
உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டுகிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 144:7
மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடிக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 144:6
உமது அம்புகளை எய்து சத்துருக்களைக் கலங்கடிக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 144:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக