புதன், 28 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 28th December 2022

சத்திய ஆராதனை
28th December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 148:8-10 

துதி ஆராதனை
*******************
உம்முடைய நாமத்தை துதிக்கிற மூடுபனிக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:8 
உம்முடைய நாமத்தை துதிக்கிற மலைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:9

உம்முடைய நாமத்தை தொகுக்கிற சகல மேடு களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 148:9 
உம்முடைய நாமத்தை துதிக்கிற
கனி மரங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 148:9

உம்முடைய நாமத்தை துதிக்கிற சகல கேதுருக்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:9 
உம்முடைய நாமத்தை துதிக்கிற காட்டு மிருகங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:10

நன்றி ஆராதனை
**********************
உம்முடைய நாமத்தை துதிக்கிற சகல நாட்டு மிருகங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:10 
உம்முடைய நாமத்தை துதிக்கிற இறகுள்ள பறவைகளுக்காக கர்த்தராகிய
தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:10

தொழுகை ஆராதனை
*************************
உம்முடைய சொற்படி செய்யும் பெருங்காற்றுக்காக கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 148:8  
உம்முடைய நாமத்தை துதிக்கிற ஊரும் பிராணிகளுக்காக கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 148:10
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக