3rd December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 143:1-6
துதி ஆராதனை
*******************
உமது நீதியின்படி எனக்கு உத்தரவு அருள் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 143:1
உமது உண்மையின்படி எனக்கு உத்தரவு அருள் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 143:1
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 143:2
என் ஆத்துமாவை தொடர்கிற சத்துருவுக்கு என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 143:3
என் பிராணனைத் தரையோடு நசுக்குகிற சத்துருவுக்கு என்னை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 143:3
எனக்குள் சோர்ந்து போகிற என் இருதயத்தை திடப்படுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 143:4
என் ஜெபத்தை கேட்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 143:1
என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 143:1
அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசிக்காதிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 143:2
நன்றி ஆராதனை
*********************
என்னில் தியங்குகிற என் ஆவியை திடப்படுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 143:4
என் கைகளை உமக்கு நேராக விரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 143:6
வறண்ட நிலத்தைப் போல என் ஆத்துமாவை உம்மேல் தாகமாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 143:6
தொழுகை ஆராதனை
************************
பூர்வநாட்களை நினைத்து தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 143:5
உமது செய்கைகளை எல்லாம் தியானித்து தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 143:5
உமது கரத்தின் கிரியைகளை யோசித்து தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 143:5
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக