5th December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 143:7-12
துதி ஆராதனை
*******************
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப் பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 143:8
எனக்கு புகலிடமாக இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 143:9
உமது கிருபையின்படி என் சத்துருக்களை அழிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 143:12
நான் நடக்க வேண்டிய வழி எனக்கு காண்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 143:8
உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்தச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 143:8
என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 143:9
சீக்கிரமாய் எனக்குச் செவி கொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 143:7
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்கு போதித்தருளுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 143:10
என்னைச் செம்மையான வழியில் நடத்துகிற நல்ல ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 143:10
நன்றி ஆராதனை
*********************
உம்மை நம்பியிருக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 143:8
உமது நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 143:11
என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம் பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 143:12
தொழுகை ஆராதனை
************************
தொய்ந்து போகிற என் ஆவியை உயிர்ப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 143:7
நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடி உமது முகத்தை எனக்கு மறையாத தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 143:7
உமது நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கி விடுகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 143:11
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக