22nd December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 147:8-13
துதி ஆராதனை
********************
தமக்குப் பயந்தவர்கள்மேல் பிரியமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 147:11
தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் பிரியமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 147:11
குதிரையின் பலத்தில் விருப்பமாயிராத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 147:10
வீரனுடைய கால்களில் பிரியப்படாத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 147:10
மலைகளில் புல்லை முளைப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 147:8
உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்துகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 147:13
நன்றி ஆராதனை
**********************
மிருகஜீவன்களுக்கு ஆகாரங்கொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 147:9
கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கு ஆகாரம் கொடுக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 147:9
தொழுகை ஆராதனை
*************************
எருசலேமை ஸ்தோத்தரிக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 147:12
சீயோனை துதிக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 147:12
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக