6th December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 144:1-4
துதி ஆராதனை
********************
என் கைகளைப் போருக்கு படிப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 144:1
என் விரல்களை யுத்தத்திற்கு படிப்பிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 144:1
என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமா யிருக்கிற கர்த்தாவே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 144:2
என் உயர்ந்த அடைக்கலமாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 144:2
என் தயாபரராகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 144:2
என் கோட்டையுமாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 144:2
என்னை விடுவிக்கிறவருமாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 144:2
என் கேடகமாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 144:2
நான் நம்பினவருமாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 144:2
நன்றி ஆராதனை
*********************
கர்த்தாவே மனுஷனை நீர் கவனிக்கிறதற்காக உமக்கு கோடான கோடி நன்றி
சங் 144:3
கர்த்தாவே மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்காக உமக்கு கோடான கோடி நன்றி
சங் 144:3
தொழுகை ஆராதனை
************************
மனுஷன் மாலைக்கு ஒப்பாயிருக்கிறான் என்று உணர்த்துகிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 144:4
மனுஷனுடைய நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானமென்று உணர்த்துகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 144:4
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக