*"இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் இரத்தசாட்சி மரணங்கள்"*
*1,மத்தேயு- எத்தியோப்பிய நாட்டில் குடல் சரிய குத்தப்பட்டு இறந்ததார்.*
*2, மாற்கு- அலெக்சாண்டிரியாப் பட்டணத்தில் தெரு வீதிகளில் நாயைப் போல் இழுத்துச் சென்று சாகடித்தார்கள்.*
*3, பெரிய யாக்கோபு- எருசலேம் நகரில் தலையை வெட்டிக் கொன்றார்கள்.*
*4, லூக்கா- கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.*
*5, யோவான்- கொதிக்கும் எண்ணெய் உள்ள இரும்புச் சட்டியில் தூக்கிப் போட்டும் சாகாததால், பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் இரகசியமாக தரிசன நூலை எழுதினார். பின்பு ஆள் ஆரவாரமற்ற அத்துவானக் காட்டில் பட்டினி கிடந்து கொடிய வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார்.*
*6, அந்திரேயா- சிலுவையில் அறைந்து அதிலிருந்தவாறே பிரசங்கிக்கச் சொன்னார்கள் இயேசுவின் போதனைகளை பிரசங்கித்துக் கொண்டே மரித்தார்.*
*7, பர்த்தலோமேயு- உயிரோடு தோல் உரிக்கப்பட்டு உயிரைவிட்டார்.*
*8, தோமா- சென்னையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.*
*9, யூதா- மரத்தில் கட்டி வைத்து அம்புகளை எய்து கொன்றார்கள்.*
*10, பர்னபா- தெசலோனிக்கே என்ற நகரில் கல்லெரியப்பட்டுக் கொல்லப்பட்டார்.*
*11, பேதரு- சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.*
*12, சின்னயாக்கோபு- கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளியும் சாகாததால் தடியால் அடித்து சித்திரவதை செய்து சாகடித்தார்கள்.*
*13, பவுல்- ரோமச் சிறையில் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருந்த வேளையிலும் பாட்டுபாடி சுவிசேஷம் அறிவித்தார். நீரோ என்ற ரோமப் பேரரசால் தலை துண்டிக்கப்பட்டு மாண்டார்.*
*இதை படிக்கும் அன்பானவர்களே இதில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்த்துவுக்குள் வருகிற பாடுகளையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக் கொல்லும் போது தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பார் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்வோம். மேலே நாம் படிக்கும் போது இத்தனை இரத்த சாட்சிகளை பார்த்தோம் அல்லவா பயமின்றி ஊழியம் செய்வோம்.*
*கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.*
-------------
இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்கள் : ( மத்தேயு - 10 : 1 - 4 )
1. சீமோன் பேதுரு : ( கிமு 1 - கிபி 67 )
* கி பி 67-ல் ரோமில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
2. அந்திரேயா :
* பட்ராஸ் என்னும் கிரேக்க நாட்டுப் பட்டணத்தில் பெருக்கல் வடிவான சிலுவையில் இரத்த சாட்சியாக மரித்தார்.
3. செபெதேயுவின் குமாரன் யாக்கோபு :
* கி பி 44-ல் ஏரோது ராஜாவினால் பட்டயத்தினால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
4. யோவான் :
* வெளிப்படுத்துதல் புத்தகத்திற்குப் பின் கிபி 100-ல் எபேசுவில் இயற்கை மரணம் எய்தார் .
5. பிலிப்பு : ( கி பி 80 )
* துருக்கி நாட்டில் கி பி 80 - ல் சிலுவையில் அறையுண்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
6. பர்த்தொலொமேயு :
* இந்தியாவின் வடதிசை மட்டும் வந்து சுவிசேஷத்தை அறிவித்து பின் தற்போதைய அல்பேனியா வரையும் சுவிசேஷத்தை அறிவித்தார்.
* அல்பேனியாவின் ராஜாவினால் தோலைக் கிழித்து துன்புறுத்தப்பட்டு பின் சிலுவையில் அறைந்து சிரைச்சேதம் செய்யப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
7. தோமா : [ கி பி 52 ]
* கி பி 52 -ல் தென் இந்தியாவிற்கு வந்து சுவிசேஷத்தை அறிவித்தார்.
* இவர் ஜெபம் செய்யும் வேளை ஈட்டியால் பின்புறமாகக் குத்தப்பட்டு கி பி 72 - ல் இரத்த சாட்சியாக மரித்தார்.
8. மத்தேயு [ ஆயக்காரன் ] :
* தற்போதைய துருக்கி நாட்டில் பட்டயத்தால் குத்தப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
9. அல்பேயுவின் குமாரன் யாக்கோபு :
* எருசலேமில் கற்களால் எறியுண்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
10. ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு :
* லெபனோன் நாட்டில் கி பி 67 - ல் கோடாரியினால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
11. கானானியனாகிய சீமோன் :
* வாளால் பாதியாக வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
12. யூதாஸ்காரியோத்து :
* இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தது பின் மனந்திரும்பாது தற்கொலை செய்து கொண்டான் . அநீதியின் பங்கை அடைந்தான்.
* வெளிப்படுத்தின விசேஷம் [ யோவான் ] - 20 : 4
4. " அன்றியும் , நான் சிங்காசனங்களைக் கண்டேன் ; அவைகளின் மேல் உட்கார்ந்தார்கள் ; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப் பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும் , மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமல் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன்.
ஆமென்🙏🙏😇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக