திங்கள், 31 ஜூலை, 2017

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் இரத்தசாட்சி மரணங்கள

*"இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் இரத்தசாட்சி மரணங்கள்"*

*1,மத்தேயு- எத்தியோப்பிய நாட்டில் குடல் சரிய குத்தப்பட்டு இறந்ததார்.*

*2, மாற்கு- அலெக்சாண்டிரியாப் பட்டணத்தில் தெரு வீதிகளில் நாயைப் போல் இழுத்துச் சென்று சாகடித்தார்கள்.*

*3, பெரிய யாக்கோபு- எருசலேம் நகரில் தலையை வெட்டிக் கொன்றார்கள்.*

*4, லூக்கா- கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.*

*5, யோவான்- கொதிக்கும் எண்ணெய் உள்ள இரும்புச் சட்டியில் தூக்கிப் போட்டும் சாகாததால், பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் இரகசியமாக தரிசன நூலை எழுதினார். பின்பு ஆள் ஆரவாரமற்ற அத்துவானக் காட்டில் பட்டினி கிடந்து கொடிய வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார்.*

*6, அந்திரேயா- சிலுவையில் அறைந்து அதிலிருந்தவாறே பிரசங்கிக்கச் சொன்னார்கள் இயேசுவின் போதனைகளை பிரசங்கித்துக் கொண்டே மரித்தார்.*

*7, பர்த்தலோமேயு- உயிரோடு தோல் உரிக்கப்பட்டு உயிரைவிட்டார்.*

*8, தோமா- சென்னையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.*

*9, யூதா- மரத்தில் கட்டி வைத்து அம்புகளை எய்து கொன்றார்கள்.*

*10, பர்னபா- தெசலோனிக்கே என்ற நகரில் கல்லெரியப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*11, பேதரு- சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*12, சின்னயாக்கோபு- கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளியும் சாகாததால் தடியால் அடித்து சித்திரவதை செய்து சாகடித்தார்கள்.*

*13, பவுல்- ரோமச் சிறையில் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருந்த வேளையிலும் பாட்டுபாடி சுவிசேஷம் அறிவித்தார். நீரோ என்ற ரோமப் பேரரசால் தலை துண்டிக்கப்பட்டு மாண்டார்.*

*இதை படிக்கும் அன்பானவர்களே இதில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்த்துவுக்குள் வருகிற  பாடுகளையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக் கொல்லும் போது தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பார் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்வோம். மேலே நாம் படிக்கும் போது இத்தனை இரத்த சாட்சிகளை பார்த்தோம் அல்லவா பயமின்றி ஊழியம் செய்வோம்.*

*கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.*



-------------


இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்கள் : ( மத்தேயு - 10 : 1 - 4 ) 


1. சீமோன் பேதுரு : ( கிமு 1 - கிபி 67 ) 


* கி பி 67-ல் ரோமில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


2. அந்திரேயா : 

  

* பட்ராஸ் என்னும் கிரேக்க நாட்டுப் பட்டணத்தில் பெருக்கல் வடிவான சிலுவையில் இரத்த சாட்சியாக மரித்தார். 


3. செபெதேயுவின் குமாரன் யாக்கோபு :


* கி பி 44-ல் ஏரோது ராஜாவினால் பட்டயத்தினால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


4. யோவான் : 


* வெளிப்படுத்துதல் புத்தகத்திற்குப் பின் கிபி 100-ல் எபேசுவில் இயற்கை மரணம் எய்தார் . 


5. பிலிப்பு : ( கி பி 80 ) 


* துருக்கி நாட்டில் கி பி 80 - ல் சிலுவையில் அறையுண்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


6. பர்த்தொலொமேயு :


* இந்தியாவின் வடதிசை மட்டும் வந்து சுவிசேஷத்தை அறிவித்து பின் தற்போதைய அல்பேனியா வரையும் சுவிசேஷத்தை அறிவித்தார். 


* அல்பேனியாவின் ராஜாவினால் தோலைக் கிழித்து துன்புறுத்தப்பட்டு பின் சிலுவையில் அறைந்து சிரைச்சேதம் செய்யப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


7. தோமா : [ கி பி 52 ]


* கி பி 52 -ல் தென் இந்தியாவிற்கு வந்து சுவிசேஷத்தை அறிவித்தார். 


* இவர் ஜெபம் செய்யும் வேளை ஈட்டியால் பின்புறமாகக் குத்தப்பட்டு கி பி 72 - ல் இரத்த சாட்சியாக மரித்தார். 


8. மத்தேயு [ ஆயக்காரன் ] :


* தற்போதைய துருக்கி நாட்டில் பட்டயத்தால் குத்தப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


9. அல்பேயுவின் குமாரன் யாக்கோபு : 


* எருசலேமில் கற்களால் எறியுண்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


10. ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு : 


* லெபனோன் நாட்டில் கி பி 67 - ல் கோடாரியினால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


11. கானானியனாகிய சீமோன் : 


* வாளால் பாதியாக வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


12. யூதாஸ்காரியோத்து :


* இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தது பின் மனந்திரும்பாது தற்கொலை செய்து கொண்டான் . அநீதியின் பங்கை அடைந்தான். 



* வெளிப்படுத்தின விசேஷம் [ யோவான் ] - 20 : 4


4. " அன்றியும் , நான் சிங்காசனங்களைக் கண்டேன் ; அவைகளின் மேல் உட்கார்ந்தார்கள் ; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப் பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும் , மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமல் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். 


          ஆமென்🙏🙏😇

வியாழன், 20 ஜூலை, 2017

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இயல்பு பற்றிய வேத வசனங்கள்:

பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். - ஆதியாகமம் 1:14

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. - ஆதியாகமம் 1:15

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். - ஆதியாகமம் 1:16

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், - ஆதியாகமம் 1:17

பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:18

பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; - சங்கீதம் 136:7

பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. - சங்கீதம் 136:8

இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; - சங்கீதம் 136:9

சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. - பிரசங்கி 1:5

அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது. - யோசுவா 10:13

இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது. - ஏசாயா 13:9

வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும். - ஏசாயா 13:10

தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று. - ஏசாயா 38:8

சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. - ஆபகூக் 3:11

பூமிக்கு கீழே உள்ள பூமியின் இயல்பு பற்றிய வேத வசனங்கள்

பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார். - யோபு 9:6

அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். - யோபு 26:7

அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும். - யோபு 26:10

அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். - யோபு 28:24

அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். - யோபு 37:3

அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: - யோபு 38:1

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. - யோபு 38:4

அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. - யோபு 38:5

அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? - யோபு 38:6

அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:7

உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? - யோபு 38:13

பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. - ஆதியாகமம் 1:9

தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:10

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். - 1 சாமுவேல் 2:8

கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. - 2 சாமுவேல் 22:16

அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. - சங்கீதம் 18:15

பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) - சங்கீதம் 75:3

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. - சங்கீதம் 93:1

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். - சங்கீதம் 96:9

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். - சங்கீதம் 96:10

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. - சங்கீதம் 96:11

நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. - சங்கீதம் 102:25

பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். - சங்கீதம் 104:5

அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. - சங்கீதம் 104:6

அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. - சங்கீதம் 104:7

அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. - சங்கீதம் 104:8

அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர். - சங்கீதம் 104:9

தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. - சங்கீதம் 136:6

அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், - நீதிமொழிகள் 8:27

உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், - நீதிமொழிகள் 8:28

சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், - நீதிமொழிகள் 8:29

ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். - ஏசாயா 11:12

அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். - ஏசாயா 40:22

நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், - ஏசாயா 43:6

நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். - தானியேல் 4:10

அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. - தானியேல் 4:11

பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். - யோனா 2:6

மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: - மத்தேயு 4:8

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்; - மத்தேயு 4:9

வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். - மத்தேயு 24:31

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன். - யோவான் 17:24

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். - வெளிப்படுத்தின விசேஷம் 1:7

இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். - வெளிப்படுத்தின விசேஷம் 7:1

பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். - வெளிப்படுத்தின விசேஷம் 20:8

வானம் பூமி அவற்றின் உறவு பற்றிய வேதவாக்கியங்கள்

அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். - யோபு 9:8

அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். - யோபு 22:14

வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ? - யோபு 37:18

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:1

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். - ஆதியாகமம் 1:2

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. - ஆதியாகமம் 1:3

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். - ஆதியாகமம் 1:4

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:5

பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். - ஆதியாகமம் 1:6

தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. - ஆதியாகமம் 1:7

தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:8

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. - சங்கீதம் 19:1

ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். - சங்கீதம் 104:2

தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். - சங்கீதம் 104:3

அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், - நீதிமொழிகள் 8:27

அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். - ஏசாயா 40:22

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். - ஏசாயா 44:24

நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். - ஏசாயா 45:12

என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். - ஏசாயா 48:13

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? - ஏசாயா 66:1

அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. - எசேக்கியேல் 1:26

அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். - ஆமோஸ் 9:6

பூமி உருண்டையா சக்கரமா ?

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். - உபாகமம் 7:6

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். - 1 சாமுவேல் 2:8

பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர். - 1 நாளாகமம் 16:30

பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்? - யோபு 34:13

அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார். - யோபு 37:12

அவர் பூவுலகை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார். - சங்கீதம் 9:8

ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூவுலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். - சங்கீதம் 19:4

உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. - சங்கீதம் 77:18

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. - சங்கீதம் 93:1

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். - சங்கீதம் 96:10

அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. - சங்கீதம் 97:4

சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. - சங்கீதம் 98:7

பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். - ஏசாயா 18:3

என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். - ஏசாயா 26:9

நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை. - ஏசாயா 26:18

ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது. - ஏசாயா 34:1

அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். - ஏசாயா 40:22

அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார். - எரேமியா 51:15

சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள். - புலம்பல் 4:12

இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. - அப்போஸ்தலர் 19:17

என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். - அப்போஸ்தலர் 24:5

இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. - ரோமர் 10:18

என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். - வெளிப்படுத்தின விசேஷம் 3:10