1.யானைக்கு அடி சறுக்கும். இவனுக்கோ முடி சறுக்கும் -அவன் யார்?
2.வேண்டாம் என்று சொன்னதை வேண்டும் என்று கேட்கவே கிடைத்தது பணம் சாக்கிலே வந்தது நிறம் கதையிலே -அவன் யார்?
3.சாத்தானின் வீட்டினிலே சாத்தானுக்கு டாட்டா காட்டி சாட்சியாய் வாழ்ந்து வந்த உண்மையுள்ள உத்தமன் – அவன் யார்?
4.காட்டில் பெய்த மழை கரை புரண்டு ஓடி வனந்திரத்தில் பாய்ந்து வழியை ஏற்படுத்தியது வானவில் ஒன்று தோன்றவே வாயாரப் புகழ்ந்தது -அது யார்?
5.உயரத்தை உரசிப் பார்த்தான் அழகை அலசிப் பார்த்தான் இஸ்ரவேலில் சிறந்து நின்றான் பதவியைக் கண்டு ஒளிந்து கொண்டான் -அவன் யார்?
6.முதலாவது இருப்பான் மூலவனைச் சொல்லுவான் முப்பெரும் தந்தையரின் முழு வரலாறும் கூறுவான் ஐம்பது கிளைகள் கொண்டவன் ஐயங்களைத் தீர்ப்பவன் -அது என்ன?
7.திருதிருவென முழித்தான் திருட்டுதனமாய் எடுத்தான் மடமடவெனத் தோண்டினான் மண்ணிற்குள் புதைத்தான் கற்கள் பார்த்து சிரிக்க கல்லால் எரிந்து கொல்லப்பட்டான் -அவன் யார்?
8.குட்டைக்கும் நெட்டைக்கும் சண்டையாம் சண்டையில் குட்டை ஜெயித்ததாம் நெட்டைக்கு நெற்றிப்பட்டை கழந்ததாய் ஜெயித்த குட்டையன் யார்? தோற்ற நெட்டையன் யார்? .
9.அரைக்கிற ஆலை தனில் அடைப்பட்டுக் கிடப்பான் ஆயுள் சக்கரத்தை அரை நொடியில் எரிப்பான் அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன?
10.விடாமல் விரட்டி விடும் தொடாமல் துரத்தி விடும் வீட்டின் வாசற்படியில் நித்தமும் படுத்திருக்கும் -அது எது?
11.கட கட மட மட கண்டவர் வாய் பிளக்க கட்டியவர் கதி கலங்க கண்டம் துண்டமாய் நின்றது -அது என்ன? .
12.நான் பாதி அவர் பாதி நாங்கள் இருவரும் பாதி பாதி wநல்ல சேதி கெட்ட சேதி அறிந்து கொண்டோம் அன்று மீதி அதனால் இன்று நீங்கள் வீதி -நாங்கள் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக