வியாழன், 29 செப்டம்பர், 2016

தேவ ஜனம்

🔎ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது👏�  📖பிரசங்கி 7:8

1⃣சவுல் → சவுல் தன்னை தானே கொலை செய்து  கொண்டான் (1 சாமு 31-4).  கர்த்தர் சவுலை தெரிந்து கொண்டார் என்று 1 சாமு 10-24 ல் வாசிக்கிறோம். கர்த்தரால் தெரிந்து கொள்ளபட்டவன் இந்த நிலைக்கு (தற்கொலை) வரக்காரணம் அவன் வாழ்க்கையில் பல ஒழுங்கினங்கள் காணப்பட்டது. (a) 🔻நன்மைக்கு தீமை செய்தான் (1 சாமு 24-17) (b) 🔻பொறாமை (காய்மகாரம்) காணப்பட்டது (1 சாமு 18:6-9)

2⃣உசியா ராஜா → இவன் தனது மரண நாள் மட்டும் குஷ்டரோகியாய் இருந்து மரித்தான். கர்த்தர் அவன் காரியங்களை வாய்க்க செய்தார் (2 நாளா 26-5). உலக ஆசிர்வாதங்களை பெற்றான் (26-10)  இவன் குஷ்டரோகியாக மாற சில கெட்ட சுபாவங்கள் காணப்பட்டது . 🔻மேட்டிமை அடைந்தான் (26-16) - ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்பட்ட போது மேட்டிமை/பெருமை அடைந்தான். பெருமையினால் பிசாசு அன்றும் இன்றும் அநேகரை வீழ்த்தி வருகிறான். சிலர்  சபையில் worship/sunday class எடுப்பார்கள். அதனால் அவர்கள் பெருமையோடு காணப்படுவதை இந்த நாட்களில் கண்கூடாக காணலாம். சில நாட்கள் முன்பு வெளிநாடு சென்று வந்த ஊழியரை சந்தித்து பேசினேன். அவர் பேச்சில் பெருமை அதிகம் காணப்பட்டது.
நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். 📖லூக்17 :10 இந்த வசனத்தை ஊழியம் செய்கிறவர்கள் மறக் கூடாது. *அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை* (📕நீதி 16-18)

3⃣சிம்சோன் → சிம்சோன் முடிவு தற்கொலை. இவன் தேவ தூதனின் அறிவிப்புபடி பிறந்தவன் (📖நியாதி 13-3) கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் (13-24) கரத்தர் ஆவி அவன் மேல் பலமாக இறங்கியது (14-6). ஆனால் முடிவு சரியில்லை. காரணம் 🔻பெண் ஆசை (தெலிலாள்). சிம்சோன் வேசித்தனத்திற்கு விலகி ஓடவில்லை (📕1 கொரி 6-18) எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இன்று அந்த கொடிய பெண்ணாசை ஆவிக்குரிய வட்டாரங்களில் தலைவிரித்தாடுகின்றது

4⃣கேயாசி → இவனது முடிவு குஷ்டரோகம் (📕2 இராஜ 5-27) எலிசா உடன் இருந்தான் இவனை Assistant pastor என்றே கூறலாம். முடிவு நாகமானின் குஷ்டரோகம் இவனை பிடித்தது. காரணம் 🔻பொருள் ஆசை (5-20)

5⃣அனனியா/சப்பிராள் → இவர்கள் 2 பேரும் ஒரே நாளில் சபையில் மரணம் அடைந்தார்கள். இவர்கள் சபைக்கு ஒழுங்காக சென்றவர்கள் (அப்போ 5-11) சொத்தை விற்று கர்த்தருக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஏற்பட காரணம் ஒரு 🔻பொய் (5-8)

இந்த வரிசையில் இன்னும் அநேகரை சேர்க்கலாம் 🔻(சாலமோன், எசேக்கியா ராஜா, மோசே, ஆதாம், ஏவாள் etc.)🔻

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக  நமக்கு எச்சரிப்புண்டாக்கும் படி எழுதப்பட்டும் இருக்கிறது.
📖1 கொரி 10:11

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்😇 📘மத்தேயு 24 :13

தேவ ஜனமே உனது முடிவை குறித்து எச்சரிக்கையாயிரு‼
நம் ஆவிக்குரிய ஒட்டம் நஷ்டம் அடையக் கூடாது🚫