வெள்ளி, 3 ஜூலை, 2015

யார் அபிஷேகம் பெற்றவர்கள்..

உண்மையாகவே நான் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறேனா -
என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். அந்நிய பாஷையை பேச வேண்டிய அவசியம் கிடையாது என்று அநேக செய்திகள் நம்மத்தியில் உலா வருகின்றது. இதையெல்லாம் வாசித்து ஒருவேளை நீங்கள் குழப்பத்துடன் இருக்கலாம். 

பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்கு முன்னதாக மூன்று கேள்விக்கான பதிலை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

1.பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்கள் என்ன செய்வார்கள்?

இயேசுகிறிஸ்து தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து தேவாலயத்தில் பிரவேசித்து, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்து ஏசாயா 61:1-3 ல் வருகின்ற வசனங்களை வாசித்ததாக லூக்கா 4:17-20 ல் பார்க்கிறோம். இங்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை இயேசு கிறிஸ்து தெளிவாக கூறியுள்ளார்.

  1. சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்,
  2. இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்.
  3. சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்,
  4. கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
  5. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும்,
  6. துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,
  7. சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்,
  8. சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், 
  9. ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும்

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார் என்று இயேசு கிறிஸ்து கூறினார். பரிசுத்த ஆவியனாவரின் அபிஷேகம் பெற்றவர்கள் இந்த ஒன்பது விதமான வேலைகளையும் செய்வார்கள்.

2. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களிடமிருந்து என்ன காரியங்கள் வெளிப்படும்?

அப்போஸ்தலராகிய பவுல் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களிடமிருந்து என்ன காரியங்கள் வெளிப்படும் என்று
I கொரிந்தியர் 12:8-11 –ல் தெளிவாக எழுதியுள்ளார்.  “சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்” (I கொரி 14:12) என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றார். 
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களிடமிருந்து ஒன்பது விதமான தேவனுடைய ஆவியின் வரங்கள் (Charisma) வெளிப்படுகின்றது. இவைகளையெல்லாம் பரிசுத்த ஆவியானவர் தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

  1. ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும்,
  2. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
  3. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும்,
  4. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
  5. வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும்,
  6. வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும்,
  7. வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும்,
  8. வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும். 
  9. வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

3. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

மத்தேயு 12:33-ல் மரமானது அதின் கனியினால் அறியப்படும் என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களைக் அவர்களிடமிருந்து வெளிப்படும் கனிகளைக் கொண்டு நம்மால் அறிய முடியும். 

இதைத்தான் கலாத்தியர் 5:22-23-ல் அப்போஸ்தலராகிய பவுல் ஆவியின் கனியோ,
  1. அன்பு, 
  2. சந்தோஷம், 
  3. சமாதானம், 
  4. நீடியபொறுமை, 
  5. தயவு, 
  6. நற்குணம், 
  7. விசுவாசம், 
  8. சாந்தம், 
  9. இச்சையடக்கம்

என்று தெளிவாக திருச்சபை விசுவாசிகளுக்கு எழுதியுள்ளார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களுக்குள் இந்த காரியங்கள் ஒன்றிணைந்து காணப்படும். இவர்கள் நிறைகுடம் போல பரிசுத்த ஆவியானவரின் அப்ஷேகத்தால் நிரம்ப பெற்றவர்கள். நானும் நிறைகுடமாக மாற விரும்பும் குறை குடமாகவே இருப்பதாக உணர்கின்றேன். பரிசுத்த ஆவியானவரின் நிறைவிற்க்காக முயற்சிப்போம்.

(இந்த காரியங்களை இதுவரை நீங்கள் செய்யாமல் இருந்தால் தயவு இவற்றை செய்யும்படி தீர்மானியுங்கள் அப்போதுதான் நீங்கள் முழுமை பெற்ற கிறிஸ்தவன்(ள்) ஆக முடியும் )

Thanks to vvministry - Got through whatsapp and edited.